'கங்குவா' படத்தில் சூர்யாவுடன் இணையும் கார்த்தி - உறுதி செய்த பாடலாசிரியர் விவேகா


சென்னை: 'கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யாவுடன் கார்த்தி இணைந்து நடிப்பது உறுதி என பாடலாசிரியர் விவேகா கூறியுள்ளார்.

சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘ஃபயர் சாங்’ படத்தில் இருந்து வெளியானது. இதனை பாடலாசிரியர் விவேகா எழுதி இருக்கிறார்.

பாடல் தொடர்பாக இந்து தமிழ் திசைக்கு அவர் கொடுத்த நேர்காணலில் இருந்து, “என்னுடைய பூர்வீகம் திருவண்ணாமலை. இந்த ஊர் பொதுவாக நெருப்பு தளத்திற்கு பெயர் போனது. அதனால், ஃபயர் சாங் எனக்குக் கொடுத்தது பெரு மகிழ்ச்சியாக இருந்தது. பாதாள நெருப்பு, மலை நெருப்பு என எல்லாமே திருவண்ணாமலை தீபத்தை நினைத்துதான் எழுதினேன்.

’கங்குவா’ எனப் படத்தின் டைட்டிலுக்கு கங்கு என்ற நெருப்பைக் குறித்துதான் உள்ளது. கதையிலும் பலருடைய பெயர்களும் நெருப்பைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இந்தப் பாடல் சூர்யா சாருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. சில வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டினார். அதேபோல, சூர்யா- கார்த்தி இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி உண்மைதான்” என்றார்.

x