சென்னை: நடிகை பிரனிதா இரண்டாவது குழந்தைக்கு அம்மா ஆகி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியுடன் ‘சகுனி’, சூர்யாவுடன் ‘மாஸ்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரனிதா. கடந்த 2021ல் நிதின் ராஜூ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டு வந்தாலும் சினிமாவில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், தான் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவித்திருக்கிறார் பிரனிதா.
வயிறு பெரிதாக இருப்பதால் தன்னுடைய பேண்ட் தன் வயிற்றிற்கு ஃபிட் ஆகவில்லை என்ற ஜாலியான கேப்ஷன் கொடுத்து, தன் கர்ப்பத்தை புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறார். பிரனிதா கூறியிருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.