சென்னை: சிவப்பு ரோஜாவாக மாறி தமன்னா எடுத்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள்தான் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.
’ஜெயிலர்’, ‘அரண்மனை4’ படங்களில் தனக்குக் கிடைத்த வரவேற்பினால் குஷியில் இருக்கிறார் தமன்னா. தமிழில் படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தாலும், இப்போது பாலிவுட்டில்தான் இவரது முழு கவனமும்.
விஜய் வர்மாவுடனான காதல் அறிவிப்பிற்கு பின்பு திருமணம் எப்போது என்ற கேள்விகள் விடாமல் துரத்தினாலும் ‘இப்போதைக்கு நோ மேரேஜ்’ என்பதில் தெளிவாக இருக்கிறார் தமன்னா. ’விஜய்க்கும் எனக்கும் இப்போது கரியர்தான் முக்கியம். திருமணத்திற்கான நேரம் வரும்போது நிச்சயம் தெரிவிப்போம்’ என்கிறார் சிரித்துக் கொண்டே.
'வேதா2’,’ஸ்ட்ரீ2’, ‘ஒடேலா’ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது. இதில் ‘ஸ்ட்ரீ2’ படவிழாவிற்கு சிவப்பு நிற உடையில், சிவப்பு ரோஜா போல வந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.