கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்; வைரலாகும் வீடியோ!


நடிகர் சிவகார்த்திகேயன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

'அமரன்’ படத்தை முடித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான ஷெட்யூல் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடந்து வர இன்னொரு பக்கம், ஷூட்டிங் பிரேக்கில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’தோனி போல செம மாஸாக சிக்ஸர் விளாசுகிறாரே’ என்று இவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த இயக்குநர் ராசு மதுவரனின் மனைவி தனது குழந்தைகள் படிப்பிற்கு சிரமப்படுவதாகத் தெரிவித்திருந்தார். விஷயம் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி இருப்பதாக வெளியான செய்திகள் வெளியானது.

x