தமிழ் நடிகர்கள் லிஸ்ட்லேயே கிடையாது.... வருஷத்துக்கு சமூக சேவைக்காக 30 கோடி செலவழிக்கும் பிரபல நடிகர்!


தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மகேஷ் பாபு ஆண்டுக்கு 30 கோடி ரூபாயை சமூக சேவைப் பணிகளுக்காக வழங்கி வருவது பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் மகேஷ் பாபு. 48 வயதாகும் இவர் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிப்பின் மூலம் மட்டுமின்றி சமூகப் பணிகளுக்காகவும் மகேஷ் பாபு தற்போது கொண்டாடப்படுகிறார். இதற்கு முழு குடும்பமும் அவருக்கு துணை நிற்கிறது. பல நூறு கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரரான மகேஷ் பாபு ஆண்டுக்கு பல கோடி ரூபாயை நன்கொடையாக அளிக்கிறார். அத்துடன் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலம் பணத்தை ஈட்டும் மகேஷ் பாபு, அப்பணத்தை சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகிறார். ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையுடன் மகேஷ் பாபு தற்போது கைகோர்த்துள்ளார். இதன் மூலம் ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவி வருகின்றார். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை இதன் மூலம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இரண்டு கிராமங்களை மகேஷ் பாபு தத்தெடுத்துள்ளார். அங்கு உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் சாலைகள், மின்சாரம், பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர் 'ஹீல் எ சைல்ட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார். இதற்கெல்லாம் ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் செலவிடுகிறார். இதன் மூலம் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை அவர் தயாரிக்கலாம். ஆனால், சமூக சேவையில் ஆர்வமுள்ள மகேஷ் பாபு சத்தமில்லாமல் அந்த வேலைக்கு இவ்வளவு நிதியை செலவு செய்து வருகிறார். இதனால் அவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

x