யூடியூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது!


சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

புதுப்புது உணவு வகைகள், உணவு இடங்களை தேடி அறிமுகம் செய்வது, உணவு வகைகளை ருசி பார்ப்பது, பிரபலங்களுடன் நட்பு என யூடியூபில் பிரபலமானவர் இர்ஃபான். இவருக்கு ஆசிபா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், தான் தந்தையான மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். இதோடு, தன் மனைவியை துபாய் அழைத்து சென்று பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அதனை யூடியூபில் அறிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். பின்பு, அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கினார்.

இப்போது தனக்குப் பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்ற செய்தியை குழந்தையின் கைவிரலை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தோடு அறிவித்து இருக்கிறார். 'திடீரென எல்லாம் மாறி விட்டது போல இருக்கிறது. என்ன நல்லது செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. இப்படி ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது. என் குடும்பம் வளர்கிறது’ எனக் கூறியிருக்கிறார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, திரைப்படத்தில் அறிமுகம் என அடுத்தடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இர்ஃபான் தற்போது அப்பாவாகி இருப்பதற்குப் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

A post shared by Mohamed Irfan (@irfansview)

x