‘ஆதி நெருப்பே... ஆறாத நெருப்பே... கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியானது!


நடிகர் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘கங்குவா’ படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. இன்று சூர்யாவின் 49வது பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தில் இருந்து தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான ‘ஆதி நெருப்பே...ஆறாத நெருப்பே...’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. விவேகா பாடல் வரிகளுக்கு மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.

பாடலின் லிரிக்கல் வீடியோவில் சில இடங்களில் வரும் வீடியோ காட்சிகளில் சூர்யா ஆக்ரோஷமாக வாளேந்தி நடனம் ஆடும் காட்சிகளுக்கு ரசிகர்கள் ஃபயர் தெறிக்க விட்டு வருகின்றனர். ’கங்குவா’ எனப் படத்தின் தலைப்பில் ஆரம்பித்து பாடல் வரிகள் வரை ஆதி தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் சிறுத்த சிவா. அதேபோலவே இந்தப் பாடல் வரிகளிலும் பாடலாசிரியர் விவேகா பாடல்கள் எழுதி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

x