மருமகனின் பிறந்தநாள் பார்ட்டி: அசத்திய சிம்பு!


தனது மருமகனின் ஏழாவது பிறந்தநாளுக்கு நடிகர் சிம்பு கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த கியூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகன் ஜேசன். ஜேசனின் ஏழாவது பிறந்தநாளை வீட்டில் எளிமையாகக் கொண்டாடி இருக்கிறார் இலக்கியா. ஜேசனுக்குப் பிடித்த கார்ட்டூன் தீமில் வீட்டை அலங்கரித்தது முதல் ஜேசனின் குழந்தைப் பருவ புகைப்படங்களை வைத்தது என பார்த்து பார்த்து இந்த சர்ப்ரைஸ் பார்ட்டியை நடத்தி இருக்கிறார் சிம்பு.

இந்த ஹவுஸ் பார்ட்டியில் நடிகர் சிம்பு ஜேசனுக்கு ஏழு கிஃப்ட் கொடுத்து அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஜேசனின் பிறந்தநாள் பார்ட்டியில் தவறாமல் கலந்து கொள்ளும் சிம்பு இந்த வருடமும் தனது மருமகனுக்கு பரிசுகள் கொடுத்து அன்பைப் பொழிந்திருக்கிறார்.

இந்த க்யூட் வீடியோவை இலக்கியா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் சிம்பு தனது 48வது படத்திற்கான கெட்டப்பில் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ’சீக்கிரம் ‘எஸ்.டி.ஆர்.48’ அப்டேட் கொடுங்க’ எனக் கேட்டு வருகின்றனர்.

x