மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் எண்ட்ரி கொடுத்த நடிகர்!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடிகர் வெங்கட் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அண்ணன் -தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை மையப்படுத்தி வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஹிட் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் - ஹேமா இருவர் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள். இதில் ஹேமாவுக்கு ஜோடியாக சின்னத்திரை தொகுப்பாளர், நடிகர் வசந்த் நடித்து வந்தார். ஆனால், அவர் சீரியலில் இருந்து தற்போது விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் வெங்கட் ஜீவா என்ற கதாபாத்திரத்தில், ஹேமாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தில் வெங்கட்-ஹேமா ஜோடி ஹிட்டடித்தது. இப்போது இரண்டாம் பாகத்திலும் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதுபற்றி வெங்கட் தனது சமூகவலைதளப்பக்கத்தில், ‘மீண்டும் சொந்த வீட்டுக்கு வந்துருக்கேன். ஆனா, செந்திலா வந்திருக்கேன்! ஜீவாவுக்கு குடுத்த அளவு கடந்த அன்பை இந்த செந்திலுக்கும் தருவீங்க என்ற நம்பிக்கையுடன்!’ என பதிவிட்டிருக்கிறார்.

x