சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகை ஷாலினி, வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர் மீது அவரது மகன் ஆத்விக் அன்பைப் பொழிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஷாலினி அஜித் உடல்நலக் குறைபாடால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சையின்போது அருகில் இல்லாததால் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அஜர்பைஜானில் இருந்து நேரே மருத்துவமனைக்கு வந்து ஷாலினியை நலம் விசாரித்தார் அஜித்.
பின்பு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஷாலினி இப்போது நலமுடன் உள்ளார். அவருக்கு முத்தம் கொடுத்து அன்பைப் பொழிந்திருக்கிறார் ஆத்விக். இந்த கியூட்டான புகைப்படத்தை ஷாலினி சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்க அஜித் ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்கவிட்டு வருகின்றனர்.