இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் ‘விடுதலை 2’


வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாக நடித்த படம், ‘விடுதலை’. இதில் விஜய் சேதுபதி, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் உட்பட சிலர் இணைந்துள்ளனர். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இதன் முதல் தோற்ற போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒரு போஸ்டரில் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் ஆவேசமாகத் தோன்றும் விஜய் சேதுபதி மற்றொன்றில் மஞ்சுவாரியருடன் நடந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருவதாக போஸ்டரில் தெரிவித்துள்ளனர்

x