அஜித்துடன் இணைந்து நடிக்கும் ஜி.பி.முத்துவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?


நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தில் ஜி.பி.முத்து இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

'வலிமை' படத்திற்கு அடுத்து நடிகர் அஜித் தற்போது 'துணிவு' படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திற்கு அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இந்தப் படத்தில்தான் ஜி.பி.முத்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் தகவலை ஜி.பி.முத்து சமீபத்தில் ஊடகத்திடமும் உறுதி செய்திருந்தார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கெனவே படத்தின் நடிகர்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் உறுதி செய்திருக்கும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

படப்பிடிப்பு ஆரம்பிப்பது மற்றும் படத்தின் நடிகர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். படத்திற்கு அனிருத் இசையமைக்க த்ரிஷா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஜி.பி.முத்து தற்போது படங்கள் மற்றும் அவருடைய பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் சன்னி லியோனுடன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

x