நடிகர் பிரஷாந்தின் ‘அந்தகன்’ பட டிரெய்லர் வெளியானது!


நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். குடும்ப பிரச்சினைகளால் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தவர் நடிகர் விஜயின் ‘GOAT' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு முன்பே, அவர் நடித்து முடித்திருந்த ‘அந்தகன்’ படம் வெளியாகாமல் இருந்தது. இந்தப் படத்தை அவரது தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கி உள்ளார்.

பாலிவுட்டில் கடந்த 2018ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் தியாகராஜன். அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், புரோமோஷன் பணிகளைத் தொடங்கும் பொருட்டு டிரெய்லரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாலிவுட்டில் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். பிரஷாந்த்,சிம்ரன் தவிர்த்து நடிகர்கள் ப்ரியா ஆனந்த், கார்த்திக், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

x