’விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு!


நடிகர் அஜித்குமாரை 'விடாமுயற்சி' படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு சந்தித்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின்'விடாமுயற்சி' படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.படக்குழுவினர் மற்றும் நடிகர் அஜித்தை இயக்குநர் வெங்கட்பிரபு சந்தித்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, 'இறுதியாக நான் எதிர்பார்த்த விஷயம் நடந்து விட்டது. ப்ரோமான்ஸ்' என அஜித்துடனான சந்திப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜயின் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் வெங்கட்பிரபு. தற்போது அஜர்பைஜானில் அஜித்தை சந்தித்துள்ளதால் ''மங்காத்தா2' உருவாக இருக்கிறதா? அல்லது படத்தில் விஜயுடன் அஜித்தை கேமியோவாக நடிக்க வைக்கிறாரா?' என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

x