குடி போதையில் தட்டுத்தடுமாறிய பிரபல பாலிவுட் நடிகை!


பிரபல பாலிவுட் நடிகை உர்ஃபி குடிபோதையில் தட்டுத் தடுமாறிய வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை உர்ஃபி சின்னத்திரை தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். இவரது நடிப்பை விட இவர் அணியும் விதவிதமான ஆடைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன. கயிறு, பைகள், பிளாஸ்டிக், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் என வித்தியாசமான பொருட்களைக் கொண்டு உடை அணிந்து கவனம் ஈர்ப்பார். இந்த நிலையில், உர்ஃபி நேற்று பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், நள்ளிரவில் அதிகளவில் குடி போதையில் நடக்கவே முடியாத அளவுக்கு நிலை தடுமாறி இருக்கிறார்.

நடக்க சிரமப்பட்ட உர்ஃபியை அவரது தோழிகள் இரண்டு பக்கமும் கைத்தாங்கலாக பிடித்து நடக்க வைத்து பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி விடும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அங்கிருப்பவர்கள் உர்ஃபியிடம் ஏதோ பேச, அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் உளறிக் கொட்டும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்தக் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் உர்ஃபியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

A post shared by Instant Bollywood (@instantbollywood)

x