குபேராவில் ராஷ்மிகா: முதல் தோற்றம் வெளியீடு


சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா நடிக்கும் படம், ‘குபேரா’. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கின்றன.

பான்-இந்தியா படமான இதில் நடித்துள்ள தனுஷ், நாகர்ஜுனா முதல் தோற்ற போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்ற கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. மண்ணுக்குள் பணத்துடன் புதைத்து வைக்கப்பட்டுள்ள சூட்கேஸை, அவர் எடுத்துச் செல்வதைப் போன்ற அவரது கதாபாத்திரத் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலானது.

x