இயக்குநர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி: கோவை ஸ்டுடியோ நிர்வாகி மீது வழக்கு


கோவை: பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், கடந்த ஆண்டு ‘டீன்ஸ்’என்ற படத்தை இயக்கினார். இதில் நடிகர் யோகிபாபு மற்றும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்யும் பணியை,கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டியோவில் பார்த்திபன் ஒப்படைத்து இருந்தார் மேலும், இது தொடர்பாக அந்த ஸ்டுடியோவின் விஷுவல்எஃபெக்ட்ஸ் பணி மேற்பார்வையாளர் சிவபிரசாத் என்பவருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்தப் பணிக்கு ரூ.68.54 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக ரூ.42 லட்சத்தை சிவபிரசாத்திடம் கடந்தஆண்டு பார்த்திபன் கொடுத்திருந்தார். ஆனால், கூறியபடி படத்துக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை சிவபிரசாத் தரப்பினர்செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது.

கூடுதலாக ரூ.88 லட்சம்... இதுகுறித்து பார்த்திபன்கேட்டபோது, பணிகளை ஏப்ரல்மாதத்துக்குள் முடித்துக் கொடுப்பதாகவும், கூடுதலாக ரூ.88 லட்சம்செலவாகும் என்றும் சிவபிரசாத் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் பணியை முடித்துக் கொடுக்காததால் திட்டமிட்டபடி ‘டீன்ஸ்‘ படத்தை பார்த்திபனால் வெளியிட முடியவில்லை.

இதையடுத்து, நடிகர் பார்த்திபன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸில் நேற்றுமுன்தினம் புகார்அளித்தார். இது தொடர்பாக, மோசடி, ஏமாற்றுதல் ஆகியபிரிவுகளில் சிவபிரசாத் மீது போலீஸார் வழக்கு்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்

x