வெங்கடேஷ் ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்


தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர், இப்போது பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் 2 நாயகிகள் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் அவர் மனைவியாகவும் மீனாட்சி சவுத்ரி இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார்.