`எனக்கு திருமணம் நடக்காததற்கு அதுதான் காரணம்’: கங்கனா ஆச்சரியம்


``தனக்குத் திருமணம் நடக்காமல் இருப்பதற்கு அதுதான் காரணம்'' என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர், லாக்கப் என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் தனது கடந்தகால வாழ்க்கைப் பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார். இப்போது அவர், ’தாக்கத்’ (Dhaakad) என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது.

இதில் கங்கனா, ஏஜென்ட் அக்னி என்ற உளவாளியாக நடித்துள்ளார். இதில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். இந்தப் படம் குறித்து சித்தார்த் கண்ணன் என்பவருக்கு அவர் அளித்த பேட்டியின்போது, திரைப்படத்தைப் போன்று நிஜ வாழ்க்கையிலும் ஆண்களை அடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே பதிலளித்தார். நிஜ வாழ்க்கையில் யாரை அடிக்க முடியும்? உங்களைப் போன்றவர்களால் பரப்பிவிடும் வதந்தியால்தான் எனக்குத் திருமணம் நடக்கவில்லை என்றார்.

’நீங்கள் கடுமையானவர் என்ற எண்ணத்தால்தான் உங்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையா? என்று கேள்விக்கு, ’நான் பசங்களை அடிப்பேன்' என்று வதந்தி பரப்பப்படுவதால்தான் முடியவில்லை என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

x