இழப்பை ஈடுகட்டிய பன்றிக்குட்டி


எஸ்மெரால்டாஸ் ட்விலைட்

தனது கணவரின் மரணத்தால் மனமுடைந்துபோன எஸ்மெரால்டா வயதான காலத்தில் நாட்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் பணிபுரியும் அவரது மகனோ தாயிடம் ஆறுதலாகக்கூடப் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிறார்.

கணவரின் இழப்பை எண்ணி சாப்பாடு மேஜையையும் படுக்கையையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் எஸ்மெரால்டாவை தேற்ற அவரது தோழிகள் முயல்கிறார்கள். அவருக்கு பிடித்தமான உணவை சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், தனது கணவரை நினைத்து உண்ணாமல் உறங்காமல் வாடிக் கிடக்கிறார். ஒருநாள் பன்றிப் பண்ணைக்குச் செல்லும் எஸ்மெரால்டா அங்கிருக்கும் பன்றிக்குட்டி ஒன்றைக் கண்டதும் தன்னை அறியாமல் பூரிப்படைகிறார். அதை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்து வாங்கி வருகிறார்.

இத்தனை நாட்களாகச் சமையல் மீதும் உணவு மீதும் பட்டற்றுப்போனவருக்கு மீண்டும் சமைக்க ஆவல் ஏற்படுகிறது. தான் அன்பு செலுத்த மீண்டும் ஒரு ஜீவன் கிடைத்துவிட உற்சாகமடைகிறார். ‘எஸ்மெரால்டாஸ் ட்விலைட்’ என்ற இந்த திரைப்படம் உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்ற நான்கு மெக்சிகன் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படவிருக்கின்றன.

சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள மெக்சிகோ தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள மெக்சிகோ தூதரகத்துடன் இணைந்து இன்று (மே 10) முதல் மே 12வரை மெக்சிகன் திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். மாலை 6:30-க்கு முதல் திரையிடல் நிகழவிருக்கிறது.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

அட் டாவ்ன்

பேனமேரிக்கன் மஷினரி

லியோனா

மெக்சிகன் திரை விழா மே, 2022

1. ’பேனமேரிக்கன் மஷினரி’ (Panamerican Machinery) – 90 நிமிடங்கள் - மே 10, மாலை 6:30

2. ’லியோனா’ (Leona) - 94 நிமிடங்கள் -மே 11, மாலை 6

3. ’எஸ்மெரால்டாஸ் ட்விலைட்' (Esmeralda´s Twilight) - ௯௦ நிமிடங்கள் - மே 11, மாலை 7:35

4. ’அட் டாவ்ன்’ (At Dawn) - 79 நிமிடங்கள் - மே 12, மாலை 6

x