நான்காம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் சன்னி அன்று தாமதமாகப் பள்ளிக்குச் சென்றுவிட்டான். சன்னி தனது வகுப்பறைக்குள் நுழையும்போது அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சன்னி என்ற அதே பெயரில் அவனது வகுப்பில் மற்றுமொரு மாணவன் புதிதாகச் சேர்ந்திருந்தான். புதிய சன்னியோ அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். அனைவரையும் கவரும் தோற்றத்திலிருக்கிறான். இதனால் நம்முடைய சன்னிக்கு தலைகுனிவாகி போனது. போதாததற்கு நம்முடைய சன்னியின் செல்லத் தோழி சோஃபியும் புதிய சன்னிக்கு நெருக்கமாகிவிட்டாள்.
இப்படி செய்வதறியாமல் தட்டுத்தடுமாறும் சிறுவனின் கோணத்திலிருந்து நகைச்சுவையாக எடுக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம், ‘சன்னி வெஸ்சஸ் சன்னி’. இந்த படம் உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆறு ஸ்வீடிஷ் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படவிருக்கின்றன.
சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள ஸ்விடன் தூதரகத்துடன் இணைந்து இன்று (ஏப்ரல் 21) முதல் ஏப்ரல் 24-ம் தேதிவரை ஸ்வீடிஷ் திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். மாலை 6:30-க்கு முதல் திரையிடல் நிகழவிருக்கிறது.
தொடர்புக்கு: 9840151956 / 8939022618
ஸ்வீடிஷ் திரை விழா ஏப்ரல், 2021
1. சன்னி வெஸ்சஸ் சன்னி (Sune vs. Sune) – 89 நிமிடங்கள் -ஏப்ரல் 21, மாலை 6:30
2. அனையரா (Aniara) - 106 நிமிடங்கள் -ஏப்ரல் 22, மாலை 6
3. லக்கி ஒன் (Lucky One) - 76 நிமிடங்கள் - ஏப்ரல் 22, மாலை 7:40
4. பிரிட் மேரி வாஸ் ஹியர் (Britt-Marie Was Here) - 97 நிமிடங்கள் - ஏப்ரல் 23, மாலை 6
5. கிங் ஆஃப் அட்லான்ட்டிஸ் (King of Atlantis) – 89 நிமிடங்கள் - ஏப்ரல் 23, மாலை 7:40
6. தி மொசார்ட் பிரதர்ஸ் (The Mozart Brothers) – 109 நிமிடங்கள் - ஏப்ரல் 24, மாலை 6