விஜய் சேதுபதியின் 51வது படத் தலைப்பு ‘ஏஸ்’


சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து வருகிறார். அவரது 50-வது படமான ‘மகாராஜா’ விரைவில் ரிலீசாக உள்ளது. ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இதில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவரது 51 வது படத்தை 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவில் நடந்தது. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இதில் யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இதற்கு ‘ஏஸ்' ( ACE) என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதல்தோற்றம் மற்றும் டைட்டில் டீஸர் இணையத்தில் பரவி வருகிறது

x