ஆச்சரியப்படுத்திய ஹெச்.ராஜாவின் ட்வீட்!


பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் செய்தி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்படங்கள் குறித்தும், அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் குறித்தும் பரபரப்பு கருத்துகளை அவ்வப்போது வெளியிடுபவர் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. நடிகர் விஜய், சூர்யா, இயக்குநர் சீமான் உள்பட பலர் ஹெச்.ராஜாவின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் சினிமா தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் தான் அது.

ஹெச்.ராஜாவின் ட்வீட்.

அதில், ‘ kashmir files என்கிற இந்தி படம் பார்த்தேன். இது சினிமா அல்ல. ஆவணம். சரித்திரம் என்றே கூற வேண்டும்’ என்று அந்த ட்வீட்டில் கூறியுள்ளார். மேலும், ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான அரசை விமர்சித்தும் ஹெச்.ராஜா ட்வீட்டில் கருத்து தெரிவித்துள்ளார். விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியான போதே, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகளை, முஸ்லிம்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதற்கு எதிரான வழக்குகளுக்குப் பின் இப்படம் வெளியாகியுள்ளது. அந்த படத்தை ஆதரித்துதான் ஹெச்.ராஜா தற்போது ட்வீட் செய்துள்ளார்.

x