ஃபேன்டசி காமெடியில் ‘ராக்கெட் டிரைவர்’


அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கும் படம், ‘ராக்கெட் டிரைவர்’. ஃபேன்டசி, டிராமா காமெடி படமாகஉருவாகும் இதில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கிறார். கவுஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

உலகையே மாற்ற வேண்டும் என்று கனவு காணும் ஆட்டோ ஓட்டுநர், தனது ரோல் மாடலை சந்திக்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் விஷயங்கள் படத்தின் கதை. ஆகஸ்டில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்கிறது படக்குழு.

x