மா.பொ.சி தலைப்பு மாற்றம்


நடிகர் போஸ் வெங்கட், ‘கன்னிமாடம்’ என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து அவர் இயக்கும் படத்துக்கு ‘மா.பொ.சி’ என்று தலைப்பு வைத்திருந்தார். இதில் விமல் ஆசிரியராக நடிக்கிறார்.

சாயா தேவி, சரவணன், ரமா உட்பட பலர் நடிக்கின்றனர். சிராஜ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்துக்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கு மா.பொ.சியின் பேத்தி பரமேசுவரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு 'சார்' என்று மாற்றப்பட்டுள்ளதாக போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

x