பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஆஸ்கருக்கு அடுத்து முக்கியமானதாகக் கருதப்படுவது, கோல்டன் குளோப் விருதுகள். 1944ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 79வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று(ஜன.10) அறிவிக்கப்பட்டன.
இந்த அமைப்பைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மீது இன பாகுபாடு, பாலியல், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதனால், ஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட நிறுவனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழாவை புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர்.
இதன் பொருட்டும் கரோனா காரணமாகவும் விருது வென்றவர்கள் விவரங்கள், நேரடியாக சமூக வலைதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி சிறந்த படமாக, ’த பவர் ஆப் டாக்’ தேர்வானது. சிறந்த நடிகராக வில் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதர விருதுகளை வென்றோர் விவரம்:
சிறந்த இயக்குநர்: ஜேன் கேம்பியன் (தி பவர் ஆஃப் தி டாக்)
சிறந்த திரைக்கதை: பெல்ஃபாஸ்ட்
சிறந்த நடிகை: நிக்கோல் கிட்மன் (பீயிங் த ரிக்கார்டோஸ்)
சிறந்த நடிகர்: வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்)
சிறந்த துணை நடிகை: அரியானா டெபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த துணை நடிகர்: கோடி ஸ்மித்-மெக்பீ (தி பவர் ஆப் த டாக்).
சிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி): ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (டிக், டிக்.. பூம்!)
சிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது காமெடி): ராச்சல் ஸெக்லர் (வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த படம் (மியூசிக்கல் அல்லது காமெடி): வெஸ்ட் சைட் ஸ்டோரி).
சிறந்த அனிமேஷன் படம்: என்கான்டோ
சிறந்த பின்னணி இசை: ஹஸ்ன் ஸிம்மர் (ட்யூன்)
சிறந்த பாடல்: நோ டைம் டு டை
சிறந்த வெளிநாட்டு படம்: டிரைவ் மை கார் (தேசம்-ஜப்பான்)