பிரபல நடிகை திடீர் விவாகரத்து


சஞ்சீதா சேக்

பிரபல நடிகை தனது காதல் கணவரைத் திடீரென பிரிந்தது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆமிர் அலி - சஞ்சீதா சேக்

தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான படம், ’பொன்னியின் செல்வன்’. இதில் ரவிகிருஷ்ணா, கோபிகா, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் 2-வது நாயகியாக நடித்திருந்தவர், இந்தி நடிகை சஞ்சீதா சேக். இந்தப் படத்தில், வெண்ணிலா என்ற பெயரில் அவர் அறிமுகமாகி இருந்தார். பின்னர் இந்திப் படங்களில் கவனம் செலுத்திய அவர், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர், இந்தி நடிகர் ஆமிர் அலியை காதலித்து வந்தார். ஆமிர் அலி, ராக், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஆமிர் அலி - சஞ்சீதா சேக்

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டிலேயே இவர்கள் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இப்போது இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். இதை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் இந்த செய்தி பரவியுள்ளது. நடிகை சஞ்சீதா, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

x