‘83’ திரைப்படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


ரஜினிகாந்த்

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற நிகழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘83’. இத்திரைப்படத்தில் ரன்பீர் சிங், தீபிகா படுகோனே, பங்கஜ் திரிபாதி, ஜீவா போன்ற பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ரன்பீர் சிங் பார்ப்பதற்கு அப்படியே கபில்தேவ் போல் உள்ளார் என்று பலரும் பாராட்டிவருகின்றனர்.

இத்திரைப்படத்தைப் பார்த்த, பல சினிமா பிரபலங்கள் அவர்களுடைய வாழ்த்துகளையும் கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் ‘83’ படம் பார்த்துவிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் பதிவு:

x