கல்கி 2829 ஏடி முன்னோட்டம்: வித்தியாசமான தோற்றத்தில் கமல்!


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் சார்பில் அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் தயாரித்துள்ளனர்.

ஜூன் 27-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் அஸ்வினி தத் வெளியிட்டார். அவர் கூறும்போது, “இந்தப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகி இருக்கிறது. பிரம்மாண்டமாகவும், ஏராளமான பொருட்செலவிலும் உருவாக்கி இருக்கிறோம். புதிய திரை அனுபவத்தை இந்தப் படம் வழங்கும்” என்றார்.

வரவேற்பைப் பெற்றுள்ள இந்த முன்னோட்டத்தில், கமல்ஹாசனின் தோற்றம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி வித்தியாசமாக உள்ளது. அவர் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x