சிம்புவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்


சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் ‘தேன்மொழி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் அதிதி.

இந்நிலையில், சிம்பு அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துவருகிறார் சிம்பு.

இதில் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க, அதிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

x