மகனின் ஒலிம்பிக் கனவுக்காகத் துபாய்க்கு குடிபெயரும் மாதவன்


நடிகர் மாதவனின்16 வயது மகன் வேதாந்த், நீச்சல் போட்டிகளில் திறமை பெற்றவராக உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார் வேதாந்த். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வருகிறார் அவர்.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் நீச்சல் குளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன் மகனின் நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்த, தான் குடும்பத்தினருடன் துபாய் சென்று குடியேறப் போவதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “உலக அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து, வேதாந்த் எனக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். சுற்றிலும் உள்ளவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வதற்கு உங்கள் பிள்ளைகளைப் பழக்கப்படுத்துங்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களைக் கவனித்துக் கொள்ளப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

x