பிட்லீ


மலையாளத்தில் 'குரூப்' திரைப்படத்தில் சாரதா குரூப் கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா, 'பொன்னியின் செல்வன்' மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் சோபிதா.

சோபிக்கண்ணு... சோபிக்கட்டும்!

ரஜிஷா விஜயன்

மலையாளத்தில் உருவாகிவரும் 'லவ்லி யுவர்ஸ் வேதா' திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கர்ணன்’, ‘ஜெய் பீம்’ திரைப்படங்களில் நடித்த ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.

சிம்பு, சூர்யா, தனுஷ்க்கு டஃப் குடுக்குறீங்களா சாரே?!

வரலட்சுமி சரத்குமார்

'சாகுந்தலம்' படத்தைத் தொடர்ந்து, கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் 'யசோதா' என்ற தெலுங்குப் படத்தில் சமந்தா நடித்துவருவது தெரிந்த செய்தி. தற்போது இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

ஓ போடவா... ஓஓ போடவா...

யாஷிகா ஆனந்த்

கார் விபத்திலிருந்து மீண்டு, பல மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் யாஷிகா ஆனந்த். அவருடைய நடிப்பில் ‘ஆர்-23: கிரிமினல்ஸ் டைரி’ என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் உருவாகிவருகிறதாம்.

மொழியா முக்கியம்?!

கத்ரினா கைஃப் - விக்கி கௌஷல்

மிக ரகசியமாக, மிகப் பிரம்மாண்டமாக கத்ரினா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்வு நடக்கிறது. தற்போது இந்த திருமணத்தை தங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட அமேசான் நிறுவனம் ரூ.80 முதல் 100 கோடி வரை பேரம் பேசிவருகிறதாம்.

முதல்லேயே டீல் முடிஞ்சுருந்தா இன்னும் பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணிருக்கலாமே?!

x