ரசிகரின் மகளுக்கு வீடியோ காலில் ஆறுதல் கூறிய ரஜினி


பெங்களூருவைச் சேர்ந்த தன் ரசிகர் ஒருவரின் மகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த ரஜினிகாந்த், அந்த ரசிகரைக் காணொலி மூலம் தொடர்புகொண்டு, அவரது மகளிடம் பேசியுள்ளார். சௌமியா என்ற அப்பெண், சீக்கிரம் குணமாக வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பு மிகுந்த அவரது இச்செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி, ரஜினிக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

x