நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. அனிருத் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் உருவான பாடல் வெளியாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.