மீண்டும் கதைநாயகனாக சேரன் - ‘தமிழ்க்குடிமகன்’


தமிழ் சினிமாவில் தனித்துவமான அடையாளம் கொண்ட இயக்குநர்களில் ஒருவர் சேரன். சமீப ஆண்டுகளாகத் திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். கௌதம் கார்த்திக்குடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தபடியாக அவர் கதைநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘தமிழ்க்குடிமகன்’ பூஜை, இன்று காலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“உங்கள் அனைவரின் அன்போடு இன்று இனிய துவக்கம்” என்று இத்திரைப்படம் குறித்துத் தெரிவித்துள்ளார் சேரன். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை இசக்கி கார்வண்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார்.

x