வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சிவாங்கி


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, தனது இனிமையான குரல்வளம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் சிவாங்கி. அதைத் தொடர்ந்து விஜய் டிவி நடத்திய இன்னொரு நிகழ்ச்சியான ‘குக் விதி கோமாளி’ நிகழ்ச்சியில் தன் சுட்டித்தனத்தால் மேலும் பிரபலமானார். விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவரும் சிவாங்கி, தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடித்துவரும் சிவாங்கி, தற்போது வடிவேலு நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து சிவாங்கி கூறும்போது, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் வடிவேலு சாருடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

x