நடிகர் அர்ஜுனுக்கு கரோனா தொற்று


தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் படங்களுக்குப் பேர் போனவர் நடிகர் அர்ஜுன். இவர் ‘ஆக்‌ஷன் கிங்’ என்ற பட்டத்தையும் பெற்றவர். தமிழ் தவிர, தென் இந்திய மொழிகளிலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துவருகிறார். தற்போது தெலுங்கில் ‘கில்லாடி’, தமிழில் ‘மேதாவி’, மலையாளத்தில் ‘விருண்ணு’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

மேலும், சின்னதிரையில் ஒளிபரப்பாகும் ‘சர்வைவர் கேம் ஷோ’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். நேற்று முன்தினம்தான் (டிச.12) இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக, நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டா ஸ்டோரியில், "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நான் நலமுடன் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

x