கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கரோனோ தொற்று


கரீனா கபூர், அம்ரிதா அரோரா

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், தற்போது ‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். கரீனா கபூர் வெளியிடங்களுக்கு, பார்டிகளுக்கு தனது தோழி அம்ரிதா அரோராவுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இந்நிலையில் இன்று இவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரீனா கபூர் - அம்ரிதா அரோரா

மும்பை மாநகராட்சி, ஏற்கனவே அமலில் இருக்கும் கரோனா விதிமுறைகளை மீறி கரீனா கபூர் மற்றும் அம்ரிதா இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

x