சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இதுமட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் ரோட்டரி சங்கத்துக்காக கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு காணொலி ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். “தடுப்பூசி ஏற்றுவோம் உலகத்தை மாற்றுவோம்” என்ற பாடல் வரிகளுடன் தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
மேலும் இந்தக் காணொலியில், சிவகார்த்திகேயன், ஜீவா, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம், பாம்பே ஜெயஸ்ரீ உட்படப் பலர் நடித்துள்ளனர்.