தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர். இவரது மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். ‘கொம்பன்’ திரைப்படத்துக்குப் பின், மீண்டும் முத்தையா-கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் ‘விருமன்’ திரைப்படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.
சென்னையில் தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த அதிதி, தற்போது அந்தப் படிப்பை முடித்துள்ளார். சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அதிதிக்கு மருத்துவர் பட்டத்தை வழங்கினார். இதுதொடர்பான புகைப்படத்தையும் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அதிதி ஷங்கர்.
தமிழ் சினிமாவில், நடிகைகள் சாய் பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரைத் தொடர்ந்து நடிகை அதிதியும் டாக்டராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.