பிட்லீ


அமலா பால்

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் வாய்ப்பு தவறிப்போன பின் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமலிருந்த அமலா பால், சற்றே ஓய்வுக்காக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்றுள்ளாராம்.

பாத்துங்க... அங்க நிலைம சரியில்ல...

தமன்னா

திரைப்படங்கள், வெப் சீரிஸ் மட்டுமல்லாமல் யூடியூபிலும் தடம் பதிக்கவுள்ளார் தமன்னா. ‘தமன்னா பாட்டியா’ என்ற பெயரில், தான் ஆரம்பித்திருக்கும் யூடியூப் சேனலில் ‘தமன்னா ஸ்பீக்ஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் தமன்னா.

கஸ்தூரி மாதிரி கருத்துச் சொல்லப் போறாரா?!

ராஷி கண்ணா

ராஷி கண்ணா தெலுங்கில் நடித்துவந்த ‘பக்கா கமர்ஷியல்’, ‘தேங்க் யூ’, தமிழில் நடித்த ‘சைதான்கா பச்சா’ படங்கள் வெளியாவதில் தடை ஏற்பட்டு முடங்கி நின்றன. இப்போது, ‘தேங்க் யூ’ படத்தின் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கண்டு தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் வெப் சீரிஸ் பக்கம் திரும்பிய ராஷி கண்ணா, இரண்டு வெப் சீரிஸில் மும்முரமாக நடித்துவருகிறாராம்.

காற்றுள்ள போதே...

ஐஸ்வர்யா ராய்

2018-ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் கமிட் ஆகாமல் இருந்த ஐஸ்வர்யா ராய், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மட்டும் நடித்துவந்தார். இதைத் தொடர்ந்து, ரவிந்திரநாத் தாகூர் எழுதிய ‘3 வுமன்’ நாவலைத் தழுவி உருவாகவுள்ள படத்திலும் நடிக்கவுள்ளாராம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகிறது.

2கே கிட்ஸ்க்கு இந்த முன்னாள் அழகியைப் பிடிக்குமா?

x