ராணுவ வீரர்கள் இறப்பை கேலி செய்யும் சமூகத்திலிருந்து வெளியேறி இந்து மதத்தை ஏற்கிறேன் - மலையாள இயக்குநர் அலி அக்பர்


அலி அக்பர்

மலையாள சினிமாவில் ‘கிராமபஞ்சாயத்’, ‘பேம்பூ பாய்ஸ்’, ‘அச்சன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அலி அக்பர். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் கொடுவாலி தொகுதியில் போட்டியிட்டார். பிறகு அதே ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, கோழிக்கோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டார். தற்போதும் பாரதிய ஜனதா கட்சியிலேயே தொடர்கிறார்.

ஆர்எஸ்எஸ் உடையில் அலி அக்பர்

சில தினங்களுக்கு முன்பு, குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தைக் கேலி செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் சில இஸ்லாமியர்கள் பதிவிடுவதால்,

“இஸ்லாம் மதத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன். இந்திய தேசத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் மரணத்துக்கு எப்படிச் சிரிக்கும் ஸ்மைலியை இவர்களால் போட முடிகிறது. இன்றிலிருந்து நான் முஸ்லிம் அல்ல இந்து மதத்துக்கு மாறுகிறேன். நான் மட்டுமல்ல என் குடும்பமே மாறுகிறோம்” என்று கூறி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் அலி அக்பர். அவரின் இந்த முடிவு கேரள சினிமா துறையிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலி அக்பர் வெளியிட்ட காணொலி:

தான் சிறுவனாக மதராஸா பள்ளியில் படிக்கும்போது, அங்கிருந்த ஆசிரியர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 2015-ம் ஆண்டு குற்றச்சாட்டைக் கூறி இஸ்லாம் சமூகத்தினரிடையே பரபரப்பைக் கிளப்பியவர் அலி அக்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

x