‘தி ஃபேமிலி மேன்’ தொடருக்காக விருது பெற்ற சமந்தா


இந்தியத் திரையுலகில் பிரபலமான விருதுகளில் ஒன்று ஃபிலிம்பேர் விருதுகள். தொடர்ந்து திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டுவந்த இந்த விருது, கடந்த சில ஆண்டுகளாக ஓடி தளங்களும் பிரபலமானதால் கடந்த ஆண்டு முதல் ஓடிடி தொடர்களுக்கும் விருதுகளை வழங்க ஆரம்பித்தது.

2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. சிறந்த சீரிஸை இயக்கியதற்கான விருது ‘ஸ்கேம் 1992’ தொடரை இயக்கிய ஹன்சல் மேத்தாவிற்கு வழங்கப்பட்டது.

அத்தொடரில் நடித்த பிரதிக் காந்தி சிறந்த நடிகருக்கான (சீரிஸ்) விருதைப் பெற்றார் ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸில் நடித்ததற்காக சமந்தா சிறந்த நடிகைக்கான (சீரிஸ்) விருதைப் பெற்றார்.

சிறந்த ஒரிஜனல் வெப் தொடர், சிறந்த ஒரிஜனல் திரைக்கதை விருது ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வசனம், சிறந்த திரைக்கதைத் தழுவல் விருதுகளை ‘ஸ்கேம் 1992’ பெற்றது.

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சமந்தா அதற்காக ‘தி ஃபேமிலி மேன்’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

x