தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகிவருகிறது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா’ திரைப்படம். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த பாடலின் படப்படிப்பு ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கடந்த திங்களன்று இந்த பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்த பின் ‘புஷ்பா’ திரைப்படத்தில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கியுள்ளார் அல்லு அர்ஜன். இதற்கு முன்பு இதேபோல் நடிகர் விஜய் ‘பிகில்’ திரைப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்குத் தங்க மோதிரம் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.