55 நாடுகளில், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் ‘விக்ராந்த் ரோணா’


கன்னட சினிமாவில் தற்போது ‘கே.ஜி.எஃப்-2’ திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்பே கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமாக உருவாகி வரும் ‘விக்ராந்த் ரோணா’ வெளியாகவுள்ளது. இத்திரைப்படம், கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக் ஷன் அட்வென்ஜர் திரைக்கதையுடன் உருவாகிவரும் இத்திரைப்படம், 3-டி தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது

அனுப் பண்டாரி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ம் தேதி 55 நாடுகளில் வெளியிடப்படவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளனர். இதுகுறித்து இயக்குநர் அனுப் பண்டாரி “விக்ராந்த் ரோணா திரையரங்க அனுபவத்திற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. இதன் பிரமாண்ட உருவாக்கமும், தொழில்நுட்பமும் வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்” என்று கூறியுள்ளார்.

x