அமெரிக்காவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’!


ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் “ஆர்.ஆர்ஆர்”.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாகச் சொல்லப்படும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் டிச.9-ல் வெளியாகவுள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் வியாபாரம் மட்டும் மொத்தமாக ரூ.900 கோடி வரை நடந்துள்ளதாக, ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. ராஜமௌலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘பாகுபலி-2’ திரைப்படமும் வசூல் ரீதியாகச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் இதுவரையிலும் வேறு எந்தப் படத்தின் வியாபாரமும் இந்த அளவுக்கு நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. பாலிவுட்டைவிட அதிகமான அளவில் வியாபாரத்தில் சாதனை படைத்துள்ள இத்திரைப்படத்தை, அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,000 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

x