பிட்லீ


ராஷி கண்ணா

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரவிருக்கிறார் ராஷி கண்ணா. விஜய் சேதுபதி இந்தியில் நடிக்கவுள்ள வெப் சீரிஸ்க்காக அவருக்கு ராசி கண்ணாவை ஜோடியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

எசமான் நீங்க அங்கேயும் போய்ட்டீங்களா?

பூஜா பலேகர்

பூஜா பலேகர் என்ற தற்காப்புக் கலை நிபுணரை வைத்து ‘லட்கி’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் மார்ஷல் ஆர்ட்ஸ் திரைப்படத்தை வெளியிட உள்ளேன் என்று சொல்லி வருகிறார் ராம் கோபால் வர்மா. சண்டைக் காட்சி, பாடல் காட்சி என்று அனைத்திலும் பூஜா பலேகர் மிகக் குறைவான ஆடையில் தோன்றுவதால், இத்திரைப்படம் கண்டிப்பாக சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வருதோ இல்லியோ சர்ச்சை மட்டும் வந்திடுது...

சாயிஷா

புனித் ராஜ்குமாரின் கடைசி திரைப்படமான ‘யுவரத்னா’ படத்தில் நடித்த சாயிஷா, மகப்பேறு விடுமுறையில் இருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் சாயிஷா. தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழி இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம் அம்மிணி.

குட்டி சாயிஷாவை எப்ப கண்ணுல காட்டுவீங்க?!

ஜான்வி கபூர்

மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பை ஜான்வி கபூர் முடித்துவிட்டாராம். அவருடைய தந்தை போனி கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தன்னுடைய மார்க்கெட்டை பாலிவுட்டில் உயர்த்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஜான்வி கபூர்.

வலிமை அப்டேட் ப்ளீஸ்..!

பிரித்விராஜ்

நடிகராக அறிமுகமாகி, மோகன்லாலை வைத்து இரண்டு படங்களை இயக்கி இயக்குநராகவும் ஜொலித்த பிரித்விராஜ், அடுத்ததாகப் பாலிவுட்டில் இந்தி தொடர் ஒன்றையும் இயக்கவுள்ளார். பிஸ்கட் கிங் ராஜன் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இத்தொடரில், பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

முல்லை பெரியாறு விஷயத்தில் கொஞ்சம் அடக்கிவாசிங்க சாரே...

x