திரையரங்கில் வெளியாகவுள்ள ‘ரைட்டர்’ - தேதி அறிவிப்பு


இயக்குநராக மட்டுமல்லாமல் தரமான திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறியப்படுபவர் பா.ரஞ்சித். தனது நீலம் புரொடக் ஷன்ஸ் சார்பில், அவர் அடுத்ததாகத் தயாரிக்கவிருக்கும் திரைப்படம் ‘ரைட்டர்’.

இத்திரைப்படம், காவல் நிலையங்களில் வழக்குகளைப் பதிவு செய்யும் எழுத்தரைப் பற்றியது. இந்தக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். ப்ராங்கிளின் ஜேக்கப் என்பவர் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

ரஞ்சித் படங்கள் என்றால் சந்தோஷ் நாராயணன் இசை என்ற நிலை இத்திரைப்படத்தில் சற்று மாற்றமடைந்து, கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்துக்கு இவர்தான் இசையமைத்திருந்தார்.

பா.ரஞ்சித் அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதை அறிவித்தவுடன், ‘ரைட்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளனர். டிச.24-ம் தேதி ‘ரைட்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நீலம் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக, யோகி பாபு நடித்திருக்கும் ‘பொம்மை நாயகி’ திரைப்படம் வெளியாகத் தயாராகிவருகிறது. இது தவிர, மேலும் 2 படங்கள் நீலம் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

x