“பிக் பாஸ் வீட்டிலிருந்து நான் வெளியேறுகிறேன்” - பகிரங்கமாக அறிவித்த பிரியங்கா


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 5-வது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரைச் செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

சமீப நாட்களாக பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து சண்டையாக நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில், பிரியங்காவிடம் மிகக் கோபமாக கத்தியுள்ளார் நிரூப். அப்போது, “உன்ன நான் கலாய்ச்சதுல எதும் பிரச்னைன்னா என்கிட்ட வந்து பேசு, அவகிட்ட ஏன் கத்திட்டு இருக்க’’ என்று பதிலுக்கு சண்டை போட்டுள்ளார் அபிஷேக். வைல்ட் கார்ட்டில் மீண்டும் நிகழ்ச்சிக்குள் நுழைந்த அபிஷேக் முன்பு போலவே பிரியங்காவுக்கு ஆதரவாக இப்போதும் இருக்கிறார். இதையடுத்து நிரூப்புக்கும், பிரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, “ப்ளீஸ் பிக் பாஸ் இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், சிபியின் பெட்டில் உட்கார்ந்து நாங்க ஒவ்வொருத்தரும் இதை இதை பண்ணலாம்ன்னு நாங்க பேசியதை தயவுசெய்து ப்ளே பண்ணுங்க. ஐ வில் கோ அவுட்” என்று கூறியுள்ளார் பிரியங்கா. இந்த வார நிகழ்ச்சியில் பிரியங்கா வெளியேறுவாரா இல்லையா என்பதுதான் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டுவருகிறது.

x