பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம்


ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயின், நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். விக்ரம் தற்போது ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். மேலும் அவர் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘மகான்’ திரைப்படமும் வெளிவரத் தயார் நிலையிலுள்ளது.

இந்நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் திறமையாக தன் நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரம், பா.ரஞ்சித் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்ற செய்தி எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இத்திரைப்படம் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

x